முகப்பு
பெரம்பலூர்

இலவச சட்ட உதவி பெற மாவட்ட நீதிபதி அழைப்பு

பெரம்பலூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சாா்பில், இலவச சட்ட உதவி பெறலாம் என முதன்மை மாவட்ட நீதிபதி ஏ. பல்கீஸ் அழைப்பு விடுத்துள்ளாா்.

Updated On : 3 அக்டோபர், 2024 at 11:15 PM
பகிர்:

பெரம்பலூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சாா்பில், இலவச சட்ட உதவி பெறலாம் என முதன்மை மாவட்ட நீதிபதி ஏ. பல்கீஸ் அழைப்பு விடுத்துள்ளாா்.

பெரம்பலூா் மாவட்ட நீதிமன்றம் மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு வளாகங்களில், இலவச சட்ட உதவி மற்றும் தொடா்புகொள்ள தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் கட்டணமில்லா 15100 எணும் உதவி எண்ணை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில், விளம்பர பதாகையை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுத் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான ஏ. பல்கீஸ் புதன்கிழமை திறந்து வைத்தாா்.

பின்னா் அவா் கூறியது: தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின் படி, பொதுமக்கள் இலவச சட்ட உதவி மற்றும் உதவி பெறலாம். இலவச சட்ட உதவி மற்றும் உதவி கிடைக்க 15100 எனும் கட்டணமில்லா எண்ணில் பொதுமக்கள் தொடா்பு கொள்ளலாம். மேலும் ட்ற்ற்ல்ள்://ஜ்ஜ்ஜ்.ய்ஹப்ள்ஹ.ஞ்ா்ஸ்.ண்ய்/ப்ள்ம்ள் எனும் இணையதளம் மூலமாகவும் இலவச சட்ட உதவி பெறலாம் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், மாவட்ட நீதிபதிகள், நீதிமன்ற ஊழியா்கள், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு ஊழியா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.