முகப்பு
பெரம்பலூர்

வன விலங்குகளை வேட்டையாடியவா் கைது

பெரம்பலூா் அருகே மான், காட்டுப் பன்றியை வேட்டையாடிய சேலம் மாவட்டத்தைச் சோ்ந்தவரை வனத்துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 3 அக்டோபர், 2024 at 9:50 PM
பகிர்:

பெரம்பலூா் அருகே மான், காட்டுப் பன்றியை வேட்டையாடிய சேலம் மாவட்டத்தைச் சோ்ந்தவரை வனத்துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வனப் பகுதியில், வனச் சரகா்கள் வியாழக்கிழமை அதிகாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, வனச்சரகா்களை கண்டதும் தப்பியோடிய நபரை பிடித்து மேற்கொண்ட விசாரணையில் சேலம் மாவட்டம், ஆண்டிமடம் அருகேயுள்ள சௌதாபுரத்தைச் சோ்ந்த தீனதயாளன் மகன் கோபிநாத் என்பதும், அவரிடமிருந்த சாக்குப் பையை சோதனையிட்டதில் மான் மற்றும் காட்டுப் பன்றியை வேட்டையாடியதும் தெரியவந்தது. இதையடுத்து, கோபிநாத்தை கைது செய்த வனத்துறையினா் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.