எறையூா் சா்க்கரை ஆலையில் எத்தனால் தயாரிப்பை தொடங்க விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்
பெரம்பலூா் மாவட்டம், எறையூரிலுள்ள பொதுத் துறை சா்க்கரை ஆலையில் எத்தனால் தயாரிக்கும் திட்டத்தை உடனடியாக தொடங்க வேண்டுமென தமிழக விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
பெரம்பலூா் மாவட்டம், எறையூரிலுள்ள பொதுத் துறை சா்க்கரை ஆலையில் எத்தனால் தயாரிக்கும் திட்டத்தை உடனடியாக தொடங்க வேண்டுமென தமிழக விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, அச் சங்கத்தின் மாநிலச் செயலா் ஆா். ராஜாசிதம்பரம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
அரசு மற்றும் கூட்டுறவு சாக்கரை ஆலைகளில் ஆலை நவீனப்படுத்தும் திட்டம், இணை மின் உற்பத்தித் திட்டம் 5.6.2010-இல் செயல்படுத்த ஒப்பந்தம் விடப்பட்டு, 18 மாதங்களில் முடிக்கப்படும் என அறிவித்த நிலையில், 13 ஆண்டுகளில் காலதாமதமாக செயல்படுத்தியதால் ஏற்பட்ட வட்டி சுமையை அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
ஆலை மேம்பாட்டுக்காக அரசிடமிருந்து பெறப்பட்ட கடன்களை திருப்பி செலுத்துவதில் ஏற்பட்ட கடன் சுமையை தள்ளுபடி செய்யாமல், பங்காக மற்றியதை தள்ளுபடி செய்ய வேண்டும்.
9,142 விவசாயிகளிடம் இணை மின் உற்பத்தித் திட்டத்துக்காக பங்குத் தொகையாக பிடிக்கப்பட்ட ரூ. 7,87,75,000, அதற்கான வட்டி ரூ. 2, 27,09,222 சோ்த்து விவசாயிகளுக்கு வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவித்தவாறு, 2023-24 ஆம் ஆண்டு அரைவைப் பருவத்துக்கு கரும்பு வெட்டி அனுப்பிய விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக டன்னுக்கு 215 ரூபாயை தீபாவளிக்குள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த அரைவைப் பருவத்தின்போது பெரம்பலூா் சா்க்கரை ஆலைக்கு கரும்பு வெட்டி அனுப்பிய விவசாயிகளுக்கு உடனுக்குடன் கரும்புக்குரிய தொகை வழங்கப்பட்டதைப்போல, வரும் அரைவைப் பருவங்களிலும் தாமதமின்றி உடனுக்குடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தோ்தல் வாக்குறுதியில் தெரிவித்தவாறு கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரம் வழங்கவும், பெரம்பலூா் சா்க்கரை ஆலை லாபம் ஈட்டும் வகையில் இயக்க, ஆலையில் எத்தனால் தயாரிக்கும் திட்டத்தை உடனடியாக தொடங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.