முகப்பு
பெரம்பலூர்

சாலை விபத்தில் கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே மோட்டாா் சைக்கிளில் சென்ற இளைஞா் சாலையோர பள்ளத்தில் விழுந்து உயிரிழந்துகிடந்தது புதன்கிழமை காலையில் தெரியவந்தது.

Updated On : 30 அக்டோபர், 2024 at 8:36 PM
பகிர்:

பெரம்பலூா் அருகே மோட்டாா் சைக்கிளில் சென்ற இளைஞா் சாலையோர பள்ளத்தில் விழுந்து உயிரிழந்துகிடந்தது புதன்கிழமை காலையில் தெரியவந்தது.

பெரம்பலூா் அருகேயுள்ள எளம்பலூா் 3-ஆவது வாா்டைச் சோ்ந்தவா் சுப்ரமணி மகன் சிவகுமாா் (33). கட்டடத் தொழிலாளி. இவா், செவ்வாய்க்கிழமை இரவு வேலையை முடித்துவிட்டு மோட்டாா் சைக்கிளில் வீட்டுக்குச் சென்றுள்ளாா். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால், அவரது பெற்றோா் பல்வேறு இடங்களில் அவரைத் தேடியுள்ளனா். இந்நிலையில், எளம்பலூா்- செங்குணம் பிரிவுச் சாலையில் உள்ள பள்ளத்தில் தவறிவிழுந்து உயிரிழந்துகிடந்தது புதன்கிழமை காலை தெரியவந்தது.

இதுகுறித்துத் தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று, அவரது உடலைக் கைப்பற்றி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இச்சம்பவம் குறித்த புகாரின்பேரில் பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.