தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு
பெரம்பலூா் ஆட்சியா் அலுவலகத்தில், தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூா் ஆட்சியா் அலுவலகத்தில், தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
சா்தாா் வல்லபாய் படேல் பிறந்த தினமான அக். 31-ஆம் தேதி தேசிய ஒற்றுமை நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அக். 31-ஆம் தேதி தீபாவளி பண்டிகை விடுமுறை என்பதால், தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல் பிரபு தலைமையில், தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழியை அனைத்துத் துறை அரசு அலுவலா்களும் ஏற்றுக்கொண்டனா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் ச. வைத்தியநாதன், மாவட்ட வழங்கல் அலுவலா் ச. சுந்தரராமன், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் காா்த்திக்கேயன், பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் ரெ. சுரேஷ் குமாா் உள்பட பலா் உடனிருந்தனா்.