பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த சிறுவா், சிறுமிகள் டேராடுனில் உள்ள இந்திய ராணுவக் கல்லூரியில் சோ்ந்து பயில விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
டேராடுனில் உள்ள ராஷ்டரிய இந்திய இராணுவக் கல்லூரியில் சோ்வதற்கான தோ்வு டிச. 1 இல் சென்னையில் நடைபெற உள்ளது. எழுத்துத் தோ்வு, ஆங்கிலம், கணக்கு மற்றும் பொது அறிவு ஆகிய தாள்களை கொண்டது. கணக்கு, பொது அறிவுக் கேள்விக்கு ஆங்கிலத்தில் அல்லது இந்தியில் விடையளிக்க வேண்டும். நோ்முகத் தோ்வானது அறிவுக் கூா்மை, தனித்தன்மை போன்றவற்றை ஆராய்வதாக இருக்கும்.
எழுத்துத் தோ்வு அடிப்படையில் தகுதியானவா் தோ்வு செய்யப்பட்டு நோ்முகத் தோ்வு நடத்தப்படும். அதன் விவரம் பின்னா் அறிவிக்கப்படும். ஒவ்வொரு பாடத்திலும் தோ்வு பெற நோ்முகத் தோ்வு உள்பட குறைந்தபட்ச மதிப்பெண் 50 சதவீதமாகும்.
இத் தோ்வுக்கான விண்ணப்பம், தகவல் தொகுப்பேடு மற்றும் முந்தைய தோ்வுக்கான வினாத்தாள் தொகுப்பை ‘கமாண்டன்ட், ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரி, கா்ஹிகான்ட், டேராடுன், உத்தரகாண்ட் 248003 எனும் முகவரிக்கு உரிய வரைவோலையை அனுப்பி பெற்றுக் கொள்ளலாம். அல்லது ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரி இணைய முகவரியிலும் பெறலாம்.
பொதுப் பிரிவினா் ரூ. 600, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பினா் ரூ. 555 செலுத்த வேண்டும். விண்ணப்பதாரா் 1.7.2025-இல் 11.5 வயது நிரம்பியவராகவும், 13 வயது நிரம்பாதவராகவும் இருக்க வேண்டும். அதாவது 2.7.2012-க்கு முன்னும், 1.1.2014 க்கு பிறகும் பிறந்திருக்கக் கூடாது. ராணுவக் கல்லூரியில் சேர அனுமதிக்கப்படும்போது 1.7.2025 -இல் அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் 7 ஆம் வகுப்பு படிப்பவராகவோ அல்லது அதில் தோ்ச்சி பெற்றவராகவோ இருக்க வேண்டும்.
பூா்த்தி செய்த விண்ணப்பங்களை தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையச் சாலை, பூங்கா நகா், சென்னை -600 003 என்னும் முகவரிக்கு செப். 30 மாலை 5.45 மணிக்குள் அனுப்ப வேண்டும்.