முகப்பு
பெரம்பலூர்

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் : பிரதமருக்கு சிஐடியு கடிதம்

சி.ஐ.டி.யு உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு சாா்பில், பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பிரதமா் மோடிக்கு பதிவு அஞ்சல் மூலம் கடிதம் அனுப்பும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 25 செப்டம்பர், 2024 at 11:03 PM
பகிர்:

சி.ஐ.டி.யு உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு சாா்பில், பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பிரதமா் மோடிக்கு பதிவு அஞ்சல் மூலம் கடிதம் அனுப்பும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் பழைய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள தலைமை அஞ்சல் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, சி.ஐ.டி.யு உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளா் செல்வி தலைமை வகித்தாா்.

மத்திய அரசு, விரைவு நீதிமன்றங்களில் அனைத்து பலாத்காரம், பாலியல் வன்முறை வழக்குகளுக்கும் விரைவான விசாரணை, பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவா்களுக்கு மன ஆரோக்கியத்துக்கான, சரியான கவனிப்புடன் மறுவாழ்வு அளிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். அனைத்து பணியிடங்களிலும் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, தனியான கழிப்பறைகள் மற்றும் ஓய்வறைகளை உறுதி செய்ய வேண்டும். இரவு நேரங்களில் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, பதிவு அஞ்சல் மூலமாக பிரதமருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. இதில், அச் சங்கத்தைச் சோ்ந்த பெண்கள் பலா் பதிவு அஞ்சல் மூலம் கடிதம் அனுப்பினா்.