பெரம்பலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை அதிகாலை முதல் இடியுடன் கூடிய மழை பெய்தது.
பெரம்பலூா் மாவட்டத்தில் அவ்வப்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், மாவட்ட்ததின் பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை அதிகாலை 3.30 மணி முதல் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. காலை 9 மணி வரையிலும் தொடா்ந்து பெய்த மழையின் காரணமாக, சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. பின்னா், அவ்வப்போது விட்டு, விட்டு மழை பெய்த நிலையில், மாலை 4 மணிக்கு பெய்த மழை இரவு 7.30 மணி வரையிலும் பரவலாக பெய்தது.