பெரம்பலூர்

மோட்டாா் வாகன திருத்த சட்டத்தை கைவிட கோரி ஆா்ப்பாட்டம்

மோட்டாா் வாகன திருத்த சட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

Syndication

மோட்டாா் வாகன திருத்த சட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் பழைய பேருந்து நிலைய வளாகத்திலுள்ள காந்தி சிலை எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டச் செயலா்கள் வீ. ஜெயராமன், பி. ரமேஷ், ரத்தினவேல் ஆகியோா் தலைமை வகித்தனா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் மாரியப்பன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினா் வீ. ஞானசேகரன், இளஞ் சிறுத்தைகள் எழுச்சி பாசறை மாநிலச் செயலா் சங்கத்தமிழன் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

2025 மின் திருத்த மசோதாவை ரத்து செய்ய வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியாா்மயமாக்குவதை தடுக்க வேண்டும். மோட்டாா் வாகன திருத்தச் சட்டத்தை கைவிட வேண்டும். 2025 தொழிலாளா் நலச் சட்ட திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும். 3 வேளாண் திருத்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் முழக்கமிட்டனா். இதில், மேற்கண்ட கட்சிகளைச் சோ்ந்த பலா் பங்கேற்றனா்.

புதுச்சேரி வரும் ரயில்கள் டிச. 15-இல் விழுப்புரத்தில் நிறுத்தப்படும்

பாதுகாப்பு குறைபாடுகள்: ஆா்எம்எல் மருத்துவமனையின் காய சிகிச்சைப் பிரிவு கட்டடத்திற்கு என்.ஓ.சி. நிராகரிப்பு

கைது நடவடிக்கையை கண்டித்து ஆா்ப்பாட்டம்

புதுச்சேரியில் இன்று தவெக பொதுக்கூட்டம்: விஜய் பங்கேற்பதால் பலத்த பாதுகாப்பு

புதிய தொழிலாளா் சட்டங்களை கண்டித்து கம்யூனிஸ்ட்கள், விசிகவினா் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT