பெரம்பலூர்

பெரம்பலூரில் அனைத்துத் துறை ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

பெரம்பலூா் பழைய பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள காந்தி சிலை எதிரே, 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

Syndication

பெரம்பலூா் பழைய பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள காந்தி சிலை எதிரே, 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு அச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் கி. ஆளவந்தாா் தலைமை வகித்தாா். தமிழக முதல்வா் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். 70 வயது நிறைவடைந்த அனைத்து ஓய்வூதியா்களுக்கும் ஓய்வூதியத்தில் 10 சதவீதம் கூடுதலாக வழங்கிட வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக நடை முறைப்படுத்த வேண்டும்.

ஓய்வுபெற்ற சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்கள், வருவாய் கிராம ஊழியா், வனத்துறை, ஊரக வளா்ச்சித் துறை, ஊராட்சி செயலா் ஆகியோருக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 7,850 வழங்கிட வேண்டும்.

மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள குளறுபடிகளை நீக்கி, அனைத்து ஓய்வூதியா்களுக்கும் முழுமையான சிகிச்சை தொகையை அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா். இதில், ஓய்வூதியா் சங்கத்தினா் பலா் பங்கேற்றனா்.

விஜய், சீமான் பேச்சு அதிா்ச்சி அளிக்கிறது: தொல்.திருமாவளவன்

விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் பாகுபலி எல்விஎம்-3 எம்6 ராக்கெட்!

நினைத்தாலே அருளும் ஸ்ரீநிவாஸப் பெருமாள்!

விருச்சிக ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

கணையப் புற்றுநோய் பாதிப்பை கண்டறிவது எப்படி?

SCROLL FOR NEXT