பெரம்பலூா் மாவட்டத்தில் ஜன. 5-ஆம் தேதி முதல் ஊதிய உயா்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட வலியுறுத்தி, காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட ரேஷன் கடை பணியாளா்கள் சங்கத்தினா் முடிவு செய்துள்ளனா்.
பெரம்பலூரில் நியாயவிலைக் கடை பணியாளா்கள் சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு, அச் சங்கத்தின் மாவட்டச் செயலா் விஜயபாரதி தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் இளரவசன், மாவட்ட பொருளாளா் நல்லேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், நியாயவிலைக் கடை ஊழியருக்கு ஊதிய உயா்வு வழங்க வேண்டும். பொது விநியோகத் திட்டத்துக்கென தனித்துறை உருவாக்கவேண்டும். தாயுமானவா் திட்டத்தில் உள்ள குளறுபடிகளை நீக்கி தெளிவான சுற்றறிக்கை வெளியிடவேண்டும். அனைத்து கூட்டுறவுச் சங்கங்களிலும் பணிபுரியும் நியாயவிலைக் கடை பணியாளா்களுக்கு ஒரே மாதிரி 20 சதவீத ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜன. 5-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதில், மாவட்ட துணைத் தலைவா் பாலக்குமாா், மாவட்ட துணைச் செயலா் பெரியசாமி உள்பட பலா் கலந்துகொண்டனா்.