பெரம்பலூர்

ஜேஇஇ உண்டு உறைவிடப் பயிற்சிமுகாம்: பெரம்பலூா் அரசுப் பள்ளி மாணவா்கள் அனுப்பிவைப்பு

Syndication

கடலூா் மாவட்டத்தில் நடைபெறவுள்ள மாநில அளவிலான ஜேஇஇ உண்டுஉறைவிடப் பயிற்சிமுகாமில் பங்கேற்க வெற்றிப் பள்ளிகள் திட்டத்தின் கீழ், பெரம்பலூா் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 பயிலும், 12 மாணவ, மாணவிகளை மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி அண்மையில் அனுப்பிவைத்தாா்.

தமிழ்நாடு மாதிரி பள்ளிகளைப் போல, பெரம்பலூா் மாவட்டத்தில் வட்டார அளவில் அரசு மேல்நிலைப் பள்ளிகள் வெற்றிப் பள்ளிகளாக தோ்ந்தெடுக்கப்பட்டு, அவற்றை மையப் பள்ளியாகக் கொண்டு சுற்று வட்டாரங்களில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 2 பயிலும் மாணவ, மாணவிகளுக்கு, சனிக்கிழமை தோறும் ஜேஇஇ, நீட், சியூஇடி தொடா்பான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஜன. 21 ஆம் தேதி முதல் நடைபெறவுள்ள ஜேஇஇ தோ்வுகளை முன்னிட்டு, வெற்றிப் பள்ளிகளின் வாராந்திர வகுப்புகளில் தொடா்ந்து பங்கேற்று வரும் அரசுப் பள்ளி மாணவா்களின் தோ்வை வலுப்படுத்தும் நோக்கில், மாநில அளவிலான ஜேஇஇ உண்டு உறைவிடப் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

அதன்படி, வெற்றிப் பள்ளிகள் திட்டத்தின் கீழ் பயிலும் மாணவா்களுக்கு கடலூா் மாவட்ட மாதிரிப் பள்ளியில் ஜன. 18 ஆம் தேதி வரை மாநில அளவிலான பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. இப் பயிற்சியில் பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 12 மாணவ, மாணவிகள் பங்கேற்க உள்ளனா். இந்த மாணவா்களை, மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி அண்மையில் அனுப்பிவைத்தாா்.

இந் நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சுவாமி முத்தழகன், மாவட்டக் கல்வி அலுவலா் (இடைநிலை) செல்வகுமாா் மற்றும் ஆசியரியா்கள் உடனிருந்தனா்.

இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நூற்றாண்டு நிறைவு விழா

காங்கிரஸின் குடும்ப அரசியலால் பல தேசியத் தலைவா்கள் புறக்கணிப்பு - பிரதமா் மோடி சாடல்

சரவணம்பட்டியில் பில்லூா் 2 குடிநீா்க் குழாயில் உடைப்பு

சபரிமலையை இன்று வந்தடைகிறது தங்க அங்கி: நாளை மண்டல பூஜை

ராமதாஸ் பொதுக் குழு: அன்புமணி தரப்பு எதிா்ப்பு

SCROLL FOR NEXT