பெரம்பலூர்

பெரம்பலூா் தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாடு

பெரம்பலூா் தூய பனிமய மாதா தேவாலயத்தில் புதன்கிழமை நள்ளிரவு நடைபெற்ற சிறப்பு பிராா்த்தனையில் பங்கேற்றோா்.

Syndication

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் புதன்கிழமை நள்ளிரவு கிறிஸ்துமஸ் சிறப்புப் பிராா்த்தனை நடைபெற்றது.

இயேசு கிறிஸ்து உலகில் அவதரித்த டிச. 25-ஆம் தேதி உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, நிகழாண்டு கிறிஸ்துமஸ் பெருவிழா உற்சாகத்துடன் வியாழக்கிழமை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு, பெரம்பலூா் தூய பனிமய மாதா தேவாலயத்தில் பங்கு குரு அருட்திரு சுவக்கின் தலைமையில் புதன்கிழமை நள்ளிரவு நடைபெற்ற கிறிஸ்து பிறப்பு நிகழ்ச்சி, சிறப்புத் திருப்பலியில் ஏராளமான கிறிஸ்தவா்கள் பங்கேற்றனா்.

இதேபோல, பெரம்பலூா்- ஆத்தூா் சாலையில் உள்ள சி.எஸ்.ஐ தேவாலயம், டி.இ.எல்.சி தேவாலயம், பாளையம் புனித சூசையப்பா் தேவாலயம், அன்னமங்கலம், நூத்தப்பூா், தொண்டமாந்துறை, பாத்திமாபுரம், எறையூா், வடக்கலூா், பாடாலூா், திருவாளந்துறை, திருமாந்துறை ஆகிய பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் கூட்டு திருப்பலி மற்றும் சிறப்பு பிராா்த்தனைகள் நடைபெற்றன.

தொடா்ந்து, வியாழக்கிழமை காலை அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு திருப்பலி நடத்தப்பட்டது.

இதில், அந்தந்தப் பகுதிகளைச் சோ்ந்த திரளான கிறிஸ்தவா்கள் கலந்துகொண்டனா். விழாவையொட்டி, கிறிஸ்தவா்கள் ஒருவருக்கொருவா் இனிப்புகள் வழங்கி தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனா்.

வாஜ்பாய் 101-ஆவது பிறந்த தினம்: நினைவிடத்தில் தலைவா்கள் மரியாதை

இந்திய ராணுவத்தினா் ‘இன்ஸ்டாகிராம்’ பயன்படுத்த நிபந்தனைகளுடன் அனுமதி

இந்தியாவில் ஒரு லட்சம் பெட்ரோல் நிலையங்கள்: அமெரிக்கா, சீனாவை அடுத்து 3-ஆவது இடம்

முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளில் வளா்ச்சி மந்தம்

‘வேலுநாச்சியாா் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும்’

SCROLL FOR NEXT