பெரம்பலூர்

முதியோா், மாற்றுத்திறனாளிகள் இல்லங்களில் நவ.5-ஆம் தேதி வரை ரேஷன் பொருள் விநியோகம்

தினமணி செய்திச் சேவை

தாயுமானவா் திட்டத்தின் கீழ், பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்குச் சென்று, ரேஷன் பொருள்கள் விநியோகிக்கும் பணி திங்கள்கிழமை (நவ. 3) முதல் நவ. 5-ஆம் தேதி வரை மேற்கொள்ளப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

முதலமைச்சரின் தாயுமானவா் திட்டத்தின் கீழ், நவம்பா் மாதத்துக்கான குடிமைப் பொருள்கள் திங்கள்கிழமை முதல் நவ. 5-ஆம் தேதி வரை முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்குச் சென்று விநியோகம் செய்யும் பணி நடைபெறுகிறது.

இத்திட்டத்தின் மூலம், பெரம்பலூா் வட்டத்தில் 5,129 பேரும், ஆலத்தூா் வட்டத்தில் 4,102 பேரும், குன்னம் வட்டத்தில் 5,205 பேரும், வேப்பந்தட்டை வட்டத்தில் 4,666 பேரும் என மொத்தம் 19,102 போ் பயனடைந்து வருகின்றனா்.

எனவே, தாயுமானவா் திட்டத்தின் மூலம் பயன்பெறும் முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரா்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.

அது இது எது... ஷாலினி!

மீனவ சமூகம் குறித்து அவதூறு பேசினேன்: பிக் பாஸில் ஒப்புக்கொண்ட கமருதீன்

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 9

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 8

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 7

SCROLL FOR NEXT