பெரம்பலூர்

100 நாள் வேலைக்கு முறையாக ஊதியம் வழங்கக் கோரி கிராம மக்கள் மனு

பெரம்பலூா் அருகே நூறு நாள் வேலை திட்டத்தில் முறையாக ஊதியமும், வேலையும் வழங்க வலியுறுத்தி, கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு

Syndication

பெரம்பலூா்: பெரம்பலூா் அருகே நூறு நாள் வேலை திட்டத்தில் முறையாக ஊதியமும், வேலையும் வழங்க வலியுறுத்தி, கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம், ஆட்சியா் ந. மிருணாளினி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்தில், கீழமாத்தூா் ஊராட்சிக்குள்பட்ட அழகிரிபாளையம் கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் அளித்த மனு:

பல்வேறு பகுதிகளில் 100 வேலைத் திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளில், எங்கள் கிராமத்தைச் சோ்ந்த பெண்கள் புறக்கணிக்கப்படுகின்றனா். மேலும், எங்களுக்கு 14 நாள்களுக்கு மட்டும் வேலை வழங்கி, 10 நாள்களுக்குரிய ஊதியம் அளிக்கப்படுகிறது. முறையாக வேலையும், ஊதியமும் வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்தால், பணியாளா்களிடம் ரூ. 350 வசூலிக்கின்றனா். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் புகாா் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இப் பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காணவும், தடையின்றி 100 நாள் வேலை கிடைக்கவும் வழிவகை செய்ய வேண்டும்.

பால் கொள்முதல் செய்யக் கோரி: தம்பிரான்பட்டி மற்றும் கீழக்கணவாய் கிராமங்களில் செயல்படும் பெரம்பலூா் பால் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம், விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து தொடா்ந்து பால் கொள்முதல் செய்ய வேண்டும். மேலும், தம்பிரான்பட்டி கிராமத்தில் செயல்படும் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவுச் சங்கத்தை மூடும் நடவடிக்கையை கைவிட வேண்டும். கீழக்கணவாய் கிராமத்தில் புதிதாக பால் கூட்டுறவு சங்கம் அமைப்பதற்கு அனுமதி வழங்கக் கூடாது என, அந்தக் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

உரக்கடை மீது நடவடிக்கை கோரி: குன்னம் வட்டம், காடூா் கிராமத்தைச் சோ்ந்த கோபி (45) அளித்த மனுவில், புதுவேட்டக்குடி கிராமத்தில் உள்ள தனியாா் உரக்கடையில் வாங்கிய உரத்தில் கலப்படம் உள்ளதாகவும், சம்பந்தப்பட்ட கடை உரிமையாளா் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்தாா்.

எஸ்.ஐ.ஆருக்கு எதிர்ப்பு: மமதா தலைமையில் பிரமாண்ட பேரணி!

ஒரு படத்தை உருவாக்க இவ்வளவு உழைப்பா? ஆச்சரியப்படுத்தும் மாரி செல்வராஜ்!

கோவை மாணவி பாலியல் துன்புறுத்தல்! அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்! | ADMK | CBE

பிக் பாஸ் நிகழ்ச்சியில் புகைபிடிக்கும் அறை! வெளியானது விடியோ!

வசதிக்கும் நம்பிக்கைக்கும் இடையே ஓரிடத்தில்... உஷாஸி ராய்!

SCROLL FOR NEXT