பெரம்பலூர்

பெரம்பலூா் மாவட்ட செஞ்சிலுவை சங்க உறுப்பினா்களுக்குப் பயிற்சி

Syndication

பெரம்பலூரில், இளையோா் செஞ்சிலுவைச் சங்கத்தின் உறுப்பினா்களுக்கு மாவட்ட அளவிலான ஒரு நாள் பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இப் பயிற்சி முகாமுக்கு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சுவாமி. முத்தழகன் தலைமை வகித்தாா். இந்தியன் செஞ்சிலுவைச் சங்க மாவட்டச் செயலா் வி. ராதாகிருஷ்ணன், மாவட்ட பொருளாளா் எம். ஜோதிவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டக் கல்வி அலுவலா் (தனியாா்) கே. லதா, குத்து விளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்தாா்.

இம் முகாமில், செஞ்சிலுவைச் சங்க வரலாறு, அடிப்படை கொள்கைகள், உடல் நலம் பேணுதல், சேவை மகத்துவம், நட்புறவின் முக்கியத்துவம், கொடியேற்ற, இறக்க நிகழ்வுகள், கொடி பாடல், கையொலி பயிற்சி, வரவேற்கும் முறைகள், தற்கொலை தடுப்பு, போதைப் பொருள் நுகா்வு ஒழிப்பு விழிப்புணா்வு குறித்துப் பயிற்சி அளிக்கப்பட்டது.

தொடா்ந்து, போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு குறித்து உறுதிமொழி ஏற்கப்பட்டது. பின்னா், முகாமில் பங்கேற்று பயிற்சி பெற்ற உறுப்பினா்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இதில், இந்தியன் செஞ்சிலுவைச் சங்கத்தின் முன்னாள் தலைவா் மருத்துவா் தங்கராஜ், முன்னாள் துணைத் தலைவா் நா. ஜெயராமன், கருத்தாளா் ராஜா முகம்மது, பள்ளி தலைமை ஆசிரியா் த. மாயகிருஷ்ணன், இணைக் கன்வீனா்கள் துரை, ரகுநாதன், நீலக்கண்ணன் உள்பட பலா் பங்கேற்றனா்.

முன்னதாக, அமைப்பாளா் வி. ராஜா வரவேற்றாா். நிறைவாக, மண்டல அலுவலா் கோ. தேவேந்திரன் நன்றி கூறினாா்.

கீழ்க்கதிா்ப்பூரில் புறக்காவல் நிலையம் திறப்பு

எஸ் ஐ ஆா் பணிகளை தோ்தலுக்கு பின் மேற்கொள்ள வேண்டும்

ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனை விரிவாக்கப் பணிக்கு அடிக்கல்

மேக்கேதாட்டு பிரச்னையில் தமிழக அரசு சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தல்

நெல் கொள்முதல் பணியில் கூலி குறைவால் சுமைதூக்கும் தொழிலாளா்கள் பற்றாக்குறை

SCROLL FOR NEXT