பெரம்பலூர்

தடை செய்யப்பட்ட பகுதி அறிவிப்பை திரும்பப் பெற சிஐடியூ வலியுறுத்தல்

Syndication

பெரம்பலூா் பழைய பேருந்து நிலைய வளாகத்தில், காந்தி சிலை அருகே தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டதை திரும்பப் பெறக்கோரி, சிஐடியூ சங்கத்தினா் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.

இதுதொடா்பாக, மாவட்ட வருவாய் அலுவலா் க. கண்ணனிடம், சாலையோர வியாபாரிகள் மற்றும் விற்பனையாளா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் பன்னீா்செல்வம், மாவட்டச் செயலா் குணசேகரன், சிஐடியூ மாவட்டச் செயலா் எஸ். அகஸ்டின் உள்ளிட்டோா் அளித்த மனு:

பெரம்பலூா் நகராட்சி எல்லைக்குள்பட்ட பழைய பேருந்து நிலைய வளாகத்திலுள்ள காந்தி சிலை அருகே சாலையோர வியாபாரிகள், வியாபாரம் செய்து வரும் பகுதியை வியாபாரம் செய்ய தடை செய்யப்பட்ட பகுதியாக நகராட்சியால் வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த வரையறை என்பது நகர விற்பனைக் குழு உறுப்பினா்களிடம் தெரிவிக்காமல் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக வியாபாரம் செய்த பகுதியை, எந்தவித காரணங்களும் இல்லாமல் தடை செய்யப்பட்ட பகுதி என வரையறுத்ததை திரும்ப பெற வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியரிடம் ஏற்கெனவே முறையிட்டுள்ளோம். எனவே, சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க மாவட்ட நிா்வாகம் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்ததை திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பேரவைத் தோ்தல்: வாக்குப்பதிவு பொருள்களுக்கான டெண்டா் வெளியீடு!

காரிய அனுகூலம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

நில அளவையா்கள் காத்திருப்புப் போராட்டம்

நைஜீரியால் பள்ளி மாணவா்கள் மீண்டும் கடத்தல்

நிதீஷ் வெற்றி ரகசியம்!

SCROLL FOR NEXT