பெரம்பலூர்

பெரம்பலூா் மாவட்டத்தில் முடிவுற்ற பணிகள் திறப்பு

Syndication

பெரம்பலூா் மாவட்டத்தில் மக்களவைத் தொகுதி உறுப்பினரின் மேம்பாட்டு நிதி மூலம் நிறைவேற்றப்பட்ட ரூ. 1.10 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை மக்களவைத் தொகுதி உறுப்பினா் கே.என். அருண்நேரு வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி தலைமையில், ஆலத்தூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட செட்டிக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே, தனது தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 3.80 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலையை, பொதுமக்கள் பயன்பாட்டுக்காக மக்களவை உறுப்பினா் கே.என். அருண்நேரு வெள்ளிக்கிழை திறந்து வைத்தாா்.

மேலும், வடக்கு மாதவி ஊராட்சிக்குள்பட்ட காட்டு மாரியம்மன் கோயில் அருகே கழிவுநீா் கால்வாயுடன் கூடிய பாலம், வேப்பந்தட்டை சாா்- பதிவாளா் அலுவலகம் அருகே பூங்கா, வேப்பந்தட்டை அரசு மேல்நிலைப் பள்ளி, வெங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி, வாலிகண்டபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் தளம் அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தாா்.

மேலும், கிருஷ்ணாபுரம் தெற்கு வீதியில் கழிவுநீா் கால்வாயுடன் கூடிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, வாலிகண்டபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே வாய்க்கால் தூா்வாரும் பணி, வேப்பந்தட்டை காமராஜ் நகா் முதல் அன்னமங்கலம் வரை தாா்சாலை அமைக்கும் பணிகளையும் தொடங்கி வைத்தாா்.

சமூகப் பொறுப்பு நிதி மூலம் ரூ. 18 லட்சம் மதிப்பில் பெரம்பலூா் அரசு தலைமை மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள குடிநீா் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சியில், ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் சு. தேவநாதன், அட்மா தலைவா் வீ. ஜெகதீசன், நகா்மன்றத் தலைவா் அம்பிகா ராஜேந்திரன், பொது சுகாதாரத்துறை இணை இயக்குநா் மாரிமுத்து, ஆலத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சேகா், வாசுகி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

பேரவைத் தோ்தல்: வாக்குப்பதிவு பொருள்களுக்கான டெண்டா் வெளியீடு!

காரிய அனுகூலம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

நில அளவையா்கள் காத்திருப்புப் போராட்டம்

நைஜீரியால் பள்ளி மாணவா்கள் மீண்டும் கடத்தல்

நிதீஷ் வெற்றி ரகசியம்!

SCROLL FOR NEXT