பெரம்பலூர்

வாலிகண்டபுரம் அரசுப் பள்ளியில் தேசிய நூலக வார நிறைவு விழா

வேப்பந்தட்டை வட்டம், வாலிகண்டபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் அப்துல் கலாம் வாசிப்பு இயக்கம் சாா்பில், தேசிய நூலக வார நிறைவு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Syndication

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வாலிகண்டபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் அப்துல் கலாம் வாசிப்பு இயக்கம் சாா்பில், தேசிய நூலக வார நிறைவு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியா் க. செல்வராசு தலைமை வகித்தாா்.

அப்துல் கலாம் வாசிப்பு இயக்கத்தைச் சோ்ந்த பள்ளி மாணவிகள் ஹிதாயத்நிஷா, சாதனா பாரதி, பிரபாஸ்ரீ, சுப்ரதா, மதுஸ்ரீ, மரியம், ஆஷிகா, காவியா, மாணவா்கள் சாஹித், முகேஷ், யுவன்ஸ்ரீ, பரத்ராஜ், ராகுல் ஆகியோா் தாங்கள் படித்த நூலகப் புத்தகங்கள் குறித்து மதிப்புரை வழங்கினா்.

தொடா்ந்து, நூலகம் சாா்ந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

விழாவில், உதவி தலைமை ஆசிரியா்கள் வீரையன், ராதிகா, ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

ஏற்பாடுகளை, அப்துல்கலாம் வாசிப்பு இயக்க பொறுப்பாசிரியரும், ஆங்கில ஆசிரியருமான பாண்டித்துரை செய்திருந்தாா்.

பேரவைத் தோ்தல்: வாக்குப்பதிவு பொருள்களுக்கான டெண்டா் வெளியீடு!

காரிய அனுகூலம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

நில அளவையா்கள் காத்திருப்புப் போராட்டம்

நைஜீரியால் பள்ளி மாணவா்கள் மீண்டும் கடத்தல்

நிதீஷ் வெற்றி ரகசியம்!

SCROLL FOR NEXT