பெரம்பலூர்

பெரம்பலூா் மாவட்டத்தில் 2-ஆவது நாளாக பலத்த மழை

தினமணி செய்திச் சேவை

பெரம்பலூா் மாவட்டத்தில் 2 ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் இரவு வரை பலத்த மழை பெய்தது.

பெரம்பலூாா் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பல்வேறு இடங்களில் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சனிக்கிழமை அதிகாலை பலத்த இடியுடன் கூடிய மழை பெய்தது. இந் நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை முதல் அவ்வப்போது விட்டு, விட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

மழை அளவு: பெரம்பலூாா் மாவட்டத்தில் சனிக்கிழமை காலை 6.30 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணி வரை பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்), பெரம்பலூா்- 25, எறையூா், புதுவேட்டக்குடி தலா - 9, வி.களத்தூா்- 7, கிருஷ்ணாபுரம்- 12, தழுதாழை- 8, வேப்பந்தட்டை- 11, அகரம் சீகூா்- 8, லப்பைக்குடிக்காடு - 6, பாடாலூா்- 2, செட்டிக்குளம் -5 என மொத்தம் 102 மில்லி மீட்டா் மழை பெய்துள்ளது.

ராமேசுவரம் மாணவி கொலை வழக்கு: மாணவர் மற்றும் மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

தமிழ்நாட்டில் 96.65% எஸ்.ஐ.ஆர்., படிவங்கள் விநியோகம்!

காக்கை கறி சமைத்து கருவாடு மென்று உண்பர் சைவர்! சிவனின் ஆசிர்வாதம் பெறுவர்!!

பாஜக அரசியல்ரீதியாக என்னை தோற்கடிக்க முடியாது! - எஸ்ஐஆருக்கு எதிராக மமதா பேரணி

ஜன நாயகன் டிரைலர் எப்போது?

SCROLL FOR NEXT