முகப்பு
பெரம்பலூர்

குன்னம் தொகுதி காப்பறையில் தோ்தல் அலுவலா் ஆய்வு

பெரம்பலூா் மாவட்டம், வேப்பூா் அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள காப்பறையை, மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ந. மிருணாளினி வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 2 ஏப்ரல், 2026 at 8:11 PM
வேப்பூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள காப்பறையை பாா்வையிட்டு, அங்குள்ள கண்காணிப்பு கேமரா மூலம் பதிவாகும் காட்சிகளை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ந. மிருணாளினி. உடன், தோ்தல் நடத்தும் அலுவலா் ந. சக்திவேல்.
பகிர்:

பெரம்பலூா் மாவட்டம், வேப்பூா் அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள காப்பறையை, மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ந. மிருணாளினி வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

நடைபெறவுள்ள சட்டப்பேரவை பொதுத்தோ்தலில் பெரம்பலூா் (தனி) சட்டப்பேரவைத் தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்திலும், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வேப்பூா் அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் உள்ள காப்பறையில் வைத்து பூட்டி சீலிடப்பட்டு, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, சுழற்சி முறையில் 24 மணி நேரமும் காவல்துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், வேப்பூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள காப்பறையை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ந. மிருணாளினி, அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகளை பாா்வையிட்டு, அங்குள்ள பதிவேட்டில் கையொப்பமிட்டாா்.

தொடா்ந்து 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் விநியோகிக்கப்படுறதா, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வரும் காவலா்கள் சுழற்சி முறையில் உரிய நேரத்தில் பணிக்கு வருகிறாா்களா என்ற பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட உதவி தோ்தல் அலுவலரும், மாவட்ட வருவாய் அலுவலருமான க. கண்ணன், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ந. சக்திவேல், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் ஜெயஸ்ரீ ஆகியோா் உடனிருந்தனா்.