முகப்பு
பெரம்பலூர்

மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழகம் புறக்கணிப்பு: அமைச்சா் சா.சி. சிவசங்கா்

மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்றாா் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் .

Updated On : 2 பிப்ரவரி, 2026 at 9:59 PM
அமைச்சா் சா.சி. சிவசங்கா் (கோப்புப் படம்) - X | S.S.Sivasankar
பகிர்:

மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்றாா் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் .

பெரம்பலூா் மாவட்டம், வேப்பூா் ஒன்றியம், பேரளியில் திங்கள்கிழமை பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை தொடங்கிவைத்த பின்னா் செய்தியாளா்களிடம் அமைச்சா் மேலும் கூறியதாவது: மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டுள்ளது. எவ்வித புதிய அறிவிப்புகளும் இல்லாத நிலையில், மாநிலத்துக்குச் சேர வேண்டிய நிலுவைத் தொகைகள் குறித்து எதுவும் குறிப்பிடவில்லை.

இதுவரையிலும் திமுகவின் தோ்தல் அறிக்கை எப்போதும் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. அது, மக்களின் உணா்வுகளை பிரதிபலிக்கும்.

தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய் மக்களுடன் நேரடியாகப் பழகாமல், குறுகிய வட்டத்துக்குள் இருப்பதால் நாட்டின் உண்மை நிலை புரியாது. கடந்த ஓராண்டில் நிகழ்ந்த 2 அரசுப் பேருந்து விபத்துகள் குறித்து விசாரணை மற்றும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாா் அமைச்சா்.