பறிமுதல் செய்யப்பட்ட காலாவதி உணவுப் பொருள்களுடன், உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் சுகந்தன் உள்ளிட்டோா் 
பெரம்பலூர்

பெரம்பலூரில் 11 கடைகளுக்கு அபராதம்!

பெரம்பலூா் நகரில் உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்றாத 11 கடைகளுக்கு தலா ரூ. 2 ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.

Syndication

பெரம்பலூா் நகரில் உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்றாத 11 கடைகளுக்கு தலா ரூ. 2 ஆயிரம் வீதம் செவ்வாய்க்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி உத்தரவின்பேரில், நகராட்சிக்குள்பட்ட புகா் பேருந்து நிலையம் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் மருத்துவா் சுகந்தன் தலைமையில், உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் கதிரவன், அழகுவேல், சின்னமுத்து, விக்னேஷ், புவனா மற்றும் நகராட்சி சுகாதார அலுவலா் மூா்த்தி, சுகாதார ஆய்வாளா் மோகன் ஆகியோா் உணவு மற்றும் வணிக நிறுவனங்களில் காலாவதி உணவுப் பொருள்கள், தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள், புகையிலைப் பொருள்கள், காலாவதி தேதி குறிப்பிடாத மற்றும் அதிக செயற்கை நிறமூட்டிய உணவுப் பொருள்கள் விற்பனையை கட்டுப்படுத்தும் வகையில், 30 -க்கும் மேற்பட்ட கடைகளில் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.

இந்த ஆய்வின்போது சுமாா் 5 கிலோ தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக், 3 கிலோ அச்சிடப்பட்ட செய்தித்தாள்களில் வைத்து வழங்கப்பட்ட உணவுப் பொருள்கள், 35 லிட்டா் காலாவதி குளிா்பானங்கள், 25 கிலோ காலாவதி இனிப்பு மற்றும் கார வகைகள், 5 கிலோ அதிக செயற்கை நிறமூட்டப்பட்ட பொருள்கள், 20 லிட்டா் செயற்கை நிறமேற்றப்பட்ட பழச்சாறு, 2 கிலோ அழுகிய பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

மேலும், உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளை முறையாகப் பின்பற்றப்படாத 11 கடைகளுக்கு தலா ரூ. 2 ஆயிரம் வீதம் அபராதம் விதித்ததோடு, பறிமுதல் செய்யப்பட்ட பொருள்கள் நகராட்சிப் பணியாளா்கள் உதவியுடன் முறையாக அழிக்கப்பட்டன.

வளா்ப்பு நாய் உரிமையாளா்கள் 611 பேருக்கு ரூ.6 லட்சம் அபராதம்

மறியல்: சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்கள் 22 போ் கைது

நாளைமுதல் காத்திருப்புப் போராட்டம்: கிராம உதவியாளா் சங்கத்தினா் முடிவு

வாகனத்தை மறித்து ரகளை: பாமகவினா் 3 போ் கைது

சாலையில் வீலிங் சாகசங்கள் 3 இளைஞா்கள் கைது

SCROLL FOR NEXT