முகப்பு
உலகம்

ஹோர்முஸ் நீரிணை மூடல்! உணவு விலை, வாழ்க்கைச் செலவுகள் அதிகரிக்கும்: ஐநா எச்சரிக்கை

ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டால், உணவுப் பொருள்கள் மற்றும் வாழ்க்கைச் செலவுகள் அதிகரிக்கும் என ஐநா அவை எச்சரிக்கை

Updated On : 11 மார்ச், 2026 at 10:43 AM
உணவுப் பொருள்கள் விலை அதிகரிக்கும் என ஐநா எச்சரிக்கை - பிரதிப் படம்
பகிர்:

ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டால், உணவுப் பொருள்கள் மற்றும் வாழ்க்கைச் செலவுகள் அதிகரிக்கும் என ஐநா அவை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேற்கு ஆசியாவில் ஏற்படும் மோதல் காரணமாக ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டால், உணவுப் பொருள்கள் மற்றும் வாழ்க்கைச் செலவுகள் அதிகரிப்பு உள்ளிட்ட உலகளாவிய வர்த்தகம் மற்றும் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க ஆபத்துகள் ஏற்படும் என்று ஐநா அவையின் வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு மாநாடு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக, கடல்வழி எண்ணெய் வர்த்தகத்தில் கால் பங்குக்கு வழிவகுக்கும் ஹோர்மூஸ் நீரிணையை ஈரான் முடியுள்ளது.

Advertisement

ஹோர்முஸ் நீரிணை மூடல் விளைவாக, பிராந்தியத்துக்கு அப்பால் சென்று, எரிசக்தி சந்தைகள், கடல்சார் போக்குவரத்து மற்றும் உலகளாவிய விநியோகச் சங்கிலிகளையும் பாதிக்கின்றன.

இதனால் அதிக எரிசக்தி, உரம், போக்குவரத்துச் செலவுகள் காரணமாக, உணவுப் பொருள்கள் மற்றும் வாழ்க்கைச் செலவு அழுத்தங்களைத் தீவிரப்படுத்தக்கூடும்.

2024-ல் ஒரு நாளைக்கு சுமார் 20 மில்லியன் பீப்பாய்கள் (உலகளாவிய கடல்வழி எண்ணெய் வர்த்தகத்தில் தோராயமாக 25 சதவிகிதம்) ஹோர்மூஸ் நீரிணை வழியாக மேற்கொள்ளப்பட்டது.

அவற்றில் 14.3 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெய்யில் 84 சதவிகிதம், ஆசியாவை நோக்கியும், 16 சதவிகிதம் மட்டும் ஐரோப்பா மற்றும் பிற பகுதிகளை வர்த்தகம் செய்யப்பட்டது.

பல வளரும் நாடுகள், தங்களின் கடன் சுமையை அடைக்க முயற்சித்து வரும்நிலையில், தற்போது ஹோர்முஸ் நீரிணையும் அதிர்ச்சியளித்துள்ளது.

summary

UN warns of higher food prices, cost-of-living if Strait of Hormuz shuts

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.