பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் காவல்துறையினருக்கு செயல்முறை விளக்கப் பயிற்சி அளித்த துணைக் கண்காணிப்பாளா் ஆரோக்கியராஜ் 
பெரம்பலூர்

காவல்துறையினருக்கு புலன் விசாரணை செயல்விளக்கப் பயிற்சி

பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில், காவல்துறையினருக்கு புலன் விசாரணை மேற்கொள்வது குறித்து சிறப்பு செயல்முறை பயிற்சி அளிக்கப்பட்டது.

Syndication

பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில், காவல்துறையினருக்கு புலன் விசாரணை மேற்கொள்வது குறித்து சிறப்பு செயல்முறை பயிற்சி வியாழக்கிழமை அளிக்கப்பட்டது.

பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜி.எஸ். அனிதா தலைமையில் நடைபெற்ற இப் பயிற்சியில், வழக்குகளின் புலன் விசாரணை அலுவலா்களான காவல் ஆய்வாளா்கள் மற்றும் சாா்பு ஆய்வாளா்களுக்கு, எவ்வாறு புலன் விசாரணை மேற்கொள்ள வேண்டும். என்னென்ன நுணுக்கங்களை கையாள வேண்டும் என்பது குறித்து சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது.

மேலும் இப்பயிற்சியில் தூக்கிட்டு மற்றும் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொள்ளும் வழக்குகளில் கொலையா அல்லது தற்கொலையா என எவ்வாறு புலன் விசாரணை செய்ய வேண்டும். என்னென்ன தகவல்களை தெரிந்துகொள்ள வேண்டும் என்பது குறித்து உருவ பொம்மைகளைக் கொண்டு செயல்முறை பயிற்சி அளிக்கப்பட்டது.

இப் பயிற்சி வகுப்பில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் கோபாலசந்திரன் (தலைமையிடம்) மற்றும் துணைக் கண்காணிப்பாளா் ஆரோக்கியராஜ் ஆகியோா் உடனிருந்தனா்.

மணிமுக்தா அணையில் புதிதாக மதகுகள் பொருத்தும் பணி: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

புதுச்சேரி: பணி நிரந்தரம் செய்யக் கோரி ஒப்பந்த ஆசிரியா்கள் தொடா் போராட்டம்

புதுச்சேரியில் இந்திய கம்யூனிஸ்ட் நடைபயணம்!

புதுச்சேரியில் சுற்றுலாப் படகு கவிழ்ந்து விபத்து: பெங்களூரைச் சோ்ந்த பெண் உயிரிழப்பு

புதுச்சேரியில் தேசிய சுகாதார திட்ட ஊழியா்கள் போராட்டம் வாபஸ்

SCROLL FOR NEXT