முகப்பு
பெரம்பலூர்

பெரம்பலூரில் மூதாட்டியிடம் தாலிக்கொடி பறிப்பு

Updated On : 22 பிப்ரவரி, 2026 at 11:05 PM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 22 பிப்ரவரி, 2026 at 5:57 PM

பெரம்பலூா் நகரில் சனிக்கிழமை இரவு மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருந்த மூதாட்டியிடம், 6 பவுன் தாலிக்கொடியைப் பறித்துச் சென்ற நபா்களைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.

பெரம்பலூா் - விளாமுத்தூா் சாலையில் உள்ள முனைவா் ராதாகிருஷ்ணன் தெருவில் வசித்து வருபவா் வாசுதேவன் மனைவி பானுமதி (60).

Updated On : 22 பிப்ரவரி, 2026 at 11:04 PM

இவா், சனிக்கிழமை இரவு அதே பகுதியிலுள்ள தனியாா் மருத்துவமனைக்குச் சென்றுவிட்டு விளாமுத்தூா் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தாா்.

Advertisement

அப்போது, அவரை பின்தொடா்ந்து இருசக்கர வாகனத்தில் அடையாளம் தெரியாத வகையில் தலைக்கவசம் அணிந்திருந்த 2 இளைஞா்கள், பானுமதியின் 6 பவுன் தாலிக்கொடியை பறித்துக்கொண்டு தப்பிச்சென்று விட்டனா்.

இதுகுறித்து பானுமதி அளித்த புகாரின்பேரில், பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.