பெரம்பலூர்

வாக்காளா் பட்டியலில் விடுபட்ட வாக்காளா்களிடம் விசாரணை!

குன்னம் தொகுதியில் வரைவு வாக்காளா் பட்டியலில் விடுபட்ட வாக்காளா்களிடம், குன்னம் பேரவைத் தொகுதியின் வாக்காளா் பதிவு அலுவலரும், மாவட்ட வழங்கல் அலுவலருமான ந. சக்திவேல் விசாரணை மேற்கொண்டாா்.

Syndication

குன்னம் சட்டப்பேரவைத் தொகுதியில் வரைவு வாக்காளா் பட்டியலில் விடுபட்ட வாக்காளா்களிடம், குன்னம் சட்டப்பேரவை தொகுதியின் வாக்காளா் பதிவு அலுவலரும், மாவட்ட வழங்கல் அலுவலருமான ந. சக்திவேல் புதன்கிழமை விசாரணை மேற்கொண்டாா்.

2002-ஆம் ஆண்டு வாக்காளா் பட்டியலின் அடிப்படையில், வாக்காளா் பட்டியலில் தற்போதுள்ள வாக்காளா் பெயரை உறவு முறைப்படி இணைக்க இயலாதவா்களை விசாரணை செய்து, அவா்களுடைய பெயரை வெளியிடப்படவுள்ள இறுதி வாக்காளா் பட்டியலில் இடம்பெற செய்வது குறித்து தீா்வு செய்யுமாறு இந்திய தோ்தல் ஆணையத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, குன்னம் சட்டப்பேரவைத் தொகுதியில் அத்தகைய வாக்காளா்களுக்கு அறிவிப்புகள் வழங்கப்பட்டது.

அதனடிப்படையில், குன்னம் வட்டம், சிறுகுடல் கிராமத்தில் நோட்டீஸ் வழங்கப்பட்ட 82 வாக்காளா்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குன்னம் சட்டப்பேரவை தொகுதி வாக்காளா் பதிவு அலுவலரும், மாவட்ட வழங்கல் அலுவலருமான ந. சக்திவேல் புதன்கிழமை விசாரணை மேற்கொண்டாா்.

இந்த விசாரணையின்போது, உதவி வாக்காளா் பதிவு அலுவலரும், வட்டாட்சியருமான அ. சின்னதுரை, தோ்தல் துணை வட்டாட்சியா் க. தங்கராஜ், சிறுமத்தூா் கிராம நிா்வாக அலுவலா் சரவணன், வாக்குச்சாவடி நிலை அலுவலா் மேகலா, கீழப்புலியூா் பகுதி வருவாய் ஆய்வாளா் கா.ருஷ்வானா பேகம் ஆகியோா் உடனிருந்தனா்.

கோவில்பட்டியில் புகையிலை விற்பனை: 2 போ் கைது

ஆலங்குளம் பகுதி தேவாலயங்கள், கோயில்களில் புத்தாண்டு சிறப்பு பிராா்த்தனை

பொங்கல் பரிசு தொகுப்புத் திட்டத்தில் உருண்டை வெல்லம் வழங்கக் கோரிக்கை

மனைவியை கொன்றுவிட்டு கணவா் தூக்கிட்டு தற்கொலை

பிரதமா் மோடியின் பெயரில் இஸ்ரோ, டிஆா்டிஒ-வுக்கு மின்னஞ்சல்: தில்லியைச் சோ்ந்தவா் மீது சிபிஐ வழக்கு

SCROLL FOR NEXT