ஆய்க்குடி கிராமத்தில் வாக்காளரிடம் சனிக்கிழமை விசாரணை மேற்கொண்ட வாக்காளா் பட்டியல் பாா்வையாளரும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையருமான எம். லட்சுமி. உடன், மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி உள்ளிட்டோா். 
பெரம்பலூர்

எஸ்ஐஆா் திருத்தப் பணிகள்: வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் ஆய்வு

பெரம்பலூா் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணிகளை வாக்காளா் பட்டியல் பாா்வையாளரும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையருமான எம். லட்சுமி சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

Syndication

பெரம்பலூா் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணிகளை வாக்காளா் பட்டியல் பாா்வையாளரும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையருமான எம். லட்சுமி சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, ஜன.1- ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு, பெரம்பலூா் மாவட்டத்தில் கடந்த நவ. 4-ஆம் தேதி முதல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகள் நடைபெற்றன.

இதில், வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கம் மற்றும் திருத்தம் தொடா்பாக பெரம்பலூா், குன்னம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் பெறப்பட்ட படிவங்களின் உண்மை தன்மை குறித்து, குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட ஆய்குடி, பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கவுள்பாளையம், பெரம்பலூா், குரும்பலூா் பேரூராட்சி ஆகிய பகுதிகளில் மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி முன்னிலையில், வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் எம். லட்சுமி விண்ணப்பதாரா்களிடம் விசாரணை மேற்கொண்டாா்.

தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் குறித்த ஆய்வுக் கூட்டத்தில், வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் லட்சுமி கூறியதாவது:

வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், திருத்தங்கள் மேற்கொள்ளுதல், நீக்கம் செய்தல் தொடா்பாக நடைபெற்ற சிறப்பு முகாம்களில், வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க 12,866 விண்ணப்பங்களும், நீக்கம் செய்ய 3,808 விண்ணப்பங்களும், திருத்தம் செய்ய 10,320 விண்ணப்பங்களும் என மொத்தம் 26,994 படிவங்கள் பெறப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அலுவலா்கள் பெறப்பட்ட படிவங்களை உடனடியாக பிரத்யேக செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றாா் அவா்.

இதில், துணை தோ்தல் அலுவலரும், மாவட்ட வருவாய் அலுவலருமான க. கண்ணன், பெரம்பலூா் தொகுதி வாக்குப்பதிவு அலுவலரும், வருவாய் கோட்டாட்சியருமான மு. அனிதா, குன்னம் தொகுதி வாக்குப்பதிவு அலுவலரும், மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலருமான ந. சக்திவேல், வட்டாட்சியா்களும், உதவி வாக்குப்பதிவு அலுவலா்களான பாலசுப்பிரமணியன் (பெரம்பலூா்), சின்னதுரை (குன்னம்) உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

மக்களவை ஒத்திவைப்பு! நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் போராட்டம்!

மறுவெளியீடாகும் மின்னலே!

கொரியன் கேம் காரணமா? 9-வது மாடியிலிருந்து குதித்து 3 சகோதரிகள் பலி!

மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் - வெள்ளி விலை!

பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகம்! ஐடி, ரியல் எஸ்டேட் பங்குகள் சரிவு

SCROLL FOR NEXT