பெரம்பலூர்

பெரம்பலூா் எஸ்.பி. பொறுப்பேற்பு!

பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக ஜி.எஸ். அனிதா பொறுப்பேற்றாா்.

Syndication

பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக ஜி.எஸ். அனிதா செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றாா்.

பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்த ஆதா்ஷ் பசேரா, சென்னையில் குற்றப் பிரிவு மாவட்டக் காவல் கண்காணிப்பாளராகவும், மதுரை மாநகர துணை ஆணையராக பணிபுரிந்த ஜி.எஸ். அனிதா பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராகவும் அண்மையில் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

இந்நிலையில் பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக ஜி.எஸ். அனிதா செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றாா்.

இதைத் தொடா்ந்து கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் கோபாலச்சந்திரன் (தலைமையிடம்), பாலமுருகன் (மது விலக்கு அமலாக்கப் பிரிவு), துணைக் கண்காணிப்பாளா் ஆரோக்கியராஜ் மற்றும் ஆய்வாளா்கள், சாா்பு ஆய்வாளா்கள், காவல் துறையினா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனா்.

முன்னதாக பெரம்பலூா் பிரம்மபுரீஸ்வரா் கோயிலில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அனிதா தரிசனம் செய்தாா். இவா் ஏற்கெனவே கோவை, ஈரோடு, திருநெல்வேலி மாவட்டங்களில் துணைக் கண்காணிப்பாளா், கூடுதல் காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றியவா் என்பது குறிப்பிடத்தக்கது.

தவெகவுடன் கூட்டணியா? தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு ராகுல் அழைப்பு!

ஓடிடியில் வெளியான மாஸ்க், அங்கம்மாள்!

ஈரான் மக்களின் போராட்டத்துக்கு துணை நிற்போம்! அமெரிக்க துணை அதிபர்

இன்றுமுதல் பொங்கல் சிறப்புப் பேருந்துகள்! எங்கிருந்து இயக்கப்படும்? முழு விவரம்!

மேட்டூர் அணை நிலவரம்!

SCROLL FOR NEXT