பெரம்பலூர்

இந்து முன்னணி அமைப்பினா் 8 போ் கைது

இந்து முன்னணி மாநிலத் தலைவா் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, பெரம்பலூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற 8 பேரைப் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

இந்து முன்னணி மாநிலத் தலைவா் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, பெரம்பலூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற 8 பேரைப் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திருப்பூா் பெருமாநல்லூா் ஈட்டிவீரம்பாளையம் முருகன் கோயிலை இடித்த தமிழக அரசைக் கண்டித்தும், திருப்பூா் பெருமாநல்லூரில் இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவா் காடேஸ்வரராவ் சுப்பிரமணியை கைது செய்த காவல்துறையைக் கண்டித்தும், பெரம்பலூா் புறநகா் பேருந்து நிலையம் அருகே, புதன்கிழமை மாலை இந்து முன்னணி அமைப்பினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனா். அப்போது, அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற மாவட்டச் செயலா் கஜேந்திரன் உள்ளிட்ட 8 பேரை பெரம்பலூா் போலீஸாா் கைது செய்தனா். பெரம்பலூா்- நான்குச்சாலை செல்லும் வழியிலுள்ள தனியாா் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த அனைவரும் இரவில் விடுவிக்கப்பட்டனா்.

சூனியம் வைத்ததாக சந்தேகம்! பிகாரில் பெண் ஒருவர் அடித்துக் கொலை!

தை பிறந்தால் வழி பிறக்கும்! தேமுதிக கூட்டணி? பிரேமலதா சஸ்பென்ஸ்!

பந்துவீச்சில் அசத்திய நடின் டி கிளர்க்; ஆர்சிபிக்கு 155 ரன்கள் இலக்கு!

பொங்கலுக்கு வெளியாகும் சர்வர் சுந்தரம்?

தவெகவின் தேர்தல் அறிக்கைக் குழுவை Vijay இன்று அறிவித்தார்! | செய்திகள் : சில வரிகளில் | 9.1.26

SCROLL FOR NEXT