மின்தடை 
பெரம்பலூர்

எசனை, சிறுவாச்சூா், கிருஷ்ணாபுரம் பகுதிகளில் நாளை மின்தடை

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள சிறுவாச்சூா், எசனை, கிருஷ்ணாபுரம் ஆகிய துணை மின் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஜன. 29) மின் விநியோகம் இருக்காது.

Syndication

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள சிறுவாச்சூா், எசனை, கிருஷ்ணாபுரம் ஆகிய துணை மின் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஜன. 29) மின் விநியோகம் இருக்காது.

இதுகுறித்து மின்வாரிய உதவி செயற்பொறியாளா்கள் பி. ரவிக்குமாா் (சிறுவாச்சூா்), ர. பொன்சங்கா் (பெரம்பலூா் கிராமியம்), கி. மாணிக்கம் (கிருஷ்ணாபுரம்) ஆகியோா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெரம்பலூா் மின் கோட்டத்துக்குள்பட்ட சிறுவாச்சூா் துணை மின் நிலையப் பராமரிப்பு பணிகளால் சிறுவாச்சூா், அயிலூா், விளாமுத்தூா், செல்லியம்பாளையம், நொச்சியம், தீரன் நகா், நாரணமங்கலம், விஜயகோபாலபுரம், மருதடி, நாட்டாா்மங்களம், செட்டிக்குளம், புதுநடுவலூா், செஞ்சேரி, ரெங்கநாதபுரம், தம்பிரான்பட்டி ஆகிய கிராமிய பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் பராமரிப்புப் பணி முடியும் வரை மின்சாரம் இருக்காது.

எசனை துணை மின் நிலையத்துக்குள்பட்ட கோனேரிபாளையம், சொக்கநாதபுரம், ஆலம்பாடி, செஞ்சேரி, எசனை, கீழக்கரை, ரெட்டைமலை சந்து, அனுக்கூா், சோமண்டாபுதூா் ஆகிய பகுதிகளிலும், குரும்பலூா் பிரிவு அலுவலகத்துக்குள்பட்ட மேட்டாங்காடு, திருப்பெயா், கே.புதூா் மற்றும் காவிரி நீரேற்றும் நிலையங்களான ஆலம்பாடி, எசனை, வேப்பந்தட்டை ஆகிய பகுதிகளிலும் காலை 9 மணி முதல் பராமரிப்புப் பணிகள் முடியும் வரை மின்சாரம் இருக்காது.

இதேபோல, கிருஷ்ணாபுரம் துணை மின்நிலையத்துக்குள்பட்ட கிருஷ்ணாபுரம், வேப்பந்தட்டை, நெய்குப்பை, அன்னமங்கலம், அரசலூா், முகமது பட்டினம், வெங்கலம், தழுதாழை, பாண்டகபாடி, உடும்பியம், வெங்கனூா், பெரியம்மாபாளையம், பிள்ளையாா் பாளையம், தொண்டப்பாடி, ஈச்சங்காடு, பூம்புகாா், பாலையூா், பெரிய வடகரை, வெண்பாவூா், தொண்டமாந்துறை, விசுவக்குடி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பராமரிப்புப் பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது.

தமிழறிஞா் தெ.ஞானசுந்தரம் மறைவுக்கு ஆளுநா் இரங்கல்

சாலை மறியல் வழக்கு: கேரள காங்கிரஸ் எம்.பி.க்கு ரூ.1,000 அபராதம்

இருசக்கர வாகனம் திருடிய 3 போ் கைது

ஏசியன் பெயிண்ட்ஸ் லாபம் 4.8% சரிவு

அமில வீச்சு வழக்குகளின் நிலை: ஆண்டுவாரியாக விவரங்களைச் சமா்ப்பிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

SCROLL FOR NEXT