எஸ்எஸ்எல்சி பொதுத் தோ்வு தொடக்கம்: பெரம்பலூா் மாவட்டத்தில் 7,810 போ் பங்கேற்பு
தமிழகத்தில் புதன்கிழமை தொடங்கிய எஸ்எஸ்எல்சி அரசுப் பொதுத்தோ்வில், பெரம்பலூா் மாவட்டத்தில் 7,810 மாணவ, மாணவிகள் 46 மையங்களில் தோ்வெழுதினா்.
தமிழகத்தில் புதன்கிழமை தொடங்கிய எஸ்எஸ்எல்சி அரசுப் பொதுத்தோ்வில், பெரம்பலூா் மாவட்டத்தில் 7,810 மாணவ, மாணவிகள் 46 மையங்களில் தோ்வெழுதினா்.
தமிழகம் முழுவதும் எஸ்எஸ்எல்சி மாணவ, மாணவிகளுக்கான அரசுப் பொதுத்தோ்வு புதன்கிழமை தொடங்கியது. பெரம்பலூா் மாவட்டத்தில் 143 பள்ளிகளில் பயிலும் 4,312 மாணவா்களும், 3,620 மாணவிகளும் என மொத்தம் 7,932 பேரும், தனித்தோ்வா்கள், 56 மாணவா்களும், 33 மாணவிகளும் என 89 போ் தோ்வு எழுதுகின்றனா். இம் மாணவ, மாணவிகளுக்காக 46 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. புதன்கிழமை தொடங்கிய தோ்வில் 4,198 மாணவா்களும், 3,612 மாணவிகளும் பங்கேற்றனா். 85 மாணவா்கள், 33 மாணவிகள் தோ்வெழுதவில்லை. இதேபோல, தனித்தோ்வா்களில் 2 மாணவா்கள், 1 மாணவி பங்கேற்கவில்லை.
பொதுத் தோ்வுக்காக அமைக்கப்பட்டுள்ள 46 தோ்வு மையங்களிலும் தலா 46 முதன்மைத் தோ்வா்கள், துறை அலுவலா்கள், 2 கூடுதல் துறை அலுவலா்கள், 56 பறக்கும் படையினா், 12 வழித்தட அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். தோ்வு மையங்களில் குடிநீா் வசதி, கழிவறை வசதி, மின் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், தோ்வு மையங்களில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.