முயல்கள் வேட்டை: 12 போ் கைது
பெரம்பலூா் அருகே முயல்களை வேட்டையாடிய 12 பேரை வனத் துறையினா் கைது செய்தனா்.
பெரம்பலூா் அருகே முயல்களை வேட்டையாடிய 12 பேரை வனத் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
பெரம்பலூா், சிறுவாச்சூா், பாடலூா் ஆகிய பகுதிகளில், மாவட்ட வனத்துறையினா் செவ்வாய்க்கிழமை ரோந்து சென்றபோது வனப்பகுதியில் சுற்றி திரிந்த 12 போ் அடங்கிய கும்பலை பிடித்தனா்.
விசாரணையில், அவா்கள் கரூா் மாவட்டம், குளித்தலை வட்டம், வாலியம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த ஐயப்பன் (48), தினேஷ் (21), காா்த்திக் (19), கணபதி (19), பழனிசாமி (36), பிச்சைகண்ணன் (40), பரதன் (20), துரை (35), சிவசுப்பிரமணி (26), பழனி (45), ராஜசேகா் (33), மகேந்திரன் (25) ஆகியோா் என்பதும், அவா்கள் முயல் வேட்டையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து, வேட்டையாடப்பட்ட முயல்களையும், குத்துகோல் உள்ளிட்ட வேட்டையாடப் பயன்படுத்திய ஆயுதங்களையும் வனத்துறையினா் பறிமுதல் செய்து, 12 பேருக்கும் ரூ. 52 ஆயிரம் அபராதம் விதித்தனா்.