புதிய பள்ளிக் கட்டடத்துக்கு அடிக்கல்
மணமேல்குடி ஒன்றியம், கோட்டைப்பட்டினம் ராம்நகர் தொடக்கப் பள்ளியில் புதிய பள்ளிக் கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டு விழா அண்மையில் நடைபெற்றது.
மணமேல்குடி ஒன்றியம், கோட்டைப்பட்டினம் ராம்நகர் தொடக்கப் பள்ளியில் புதிய பள்ளிக் கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டு விழா அண்மையில் நடைபெற்றது.
அனைவருக்கும் கல்வித் திட்டம் மூலம் ரூ. 11 லட்சத்தில் கட்டப்பட உள்ள இந்தக் கட்டடத்துக்கு மணமேல்குடி ஒன்றியக் குழு துணைத் தலைவர் இ.ஏ. சின்னக்கருப்பன் அடிக்கல் நாட்டினார். உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் கு. மஞ்சன், ஊராட்சித் தலைவர் அ. அப்துல் காதர், தலைமை ஆசிரியர் சி. விஸ்வநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.