புதுக்கோட்டை

சுதந்திர தின விழா அணிவகுப்பு ஒத்திகை

DIN

நாட்டின்  72 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு,  புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் போலீஸார், தீயணைப்பு வீரர்கள் ஞாயிற்றுக்கிழமை அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் ஆண்டுதோறும் சுதந்திரதின விழா ஆட்சியர் தலைமையில் நடைபெறுவது வழக்கம். விழாவில், போலீஸார், தீயணைப்புத் துறையினரின் அணிவகுப்பு மரியாதை நடைபெறும்.
அரசுத் துறைகளில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்படுவதோடு, அரசு, தனியார் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.  நிகழாண்டில் சுதந்திர தினவிழாவுக்கான முன்னேற்பாட்டு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மைதானத்தை தயார் செய்து,  கொடிக்கம்பத்தில் வர்ணம் பூசும் பணி ஆகியவை நடைபெற்றது.
தொடர்ந்து, போலீஸார், தீயணைப்பு வீரர்கள் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT