புதுக்கோட்டை

அறந்தாங்கியில்  இளைஞர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டம்

DIN

அறந்தாங்கி தலைமை தபால் நிலையம் எதிரே அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காலி அரசுப் பணியிடங்களை உடனே நிரப்பக் கோரியும், மக்கள் தொகைக்கு ஏற்ப அரசுப் பணியிடங்களை அதிகரிக்கக்கோரியும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை திரும்பப் பெற்றிடக்கோரியும், விஏஓ மற்றும் குரூப்-4 தேர்வுகளை தனித்தனியே நடத்தக்கோரியும், தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்பு பறிபோவதை தடுத்திட வலியுறுத்தியும்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
ஆர்ப்பாட்டத்துக்கு, அமைப்பின் புதுக்கோட்டை மாவட்ட தலைவர் எம்.கே. ஆரோக்கியசாமி தலைமை வகித்தார். ஒன்றியத் தலைவர் எஸ்.பழனியப்பன், ஒன்றியச்செயலாளர் கே.சங்கர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன் தொடக்க உரையாற்றினார். மாநில துணைச் செயலாளர் உ.சிவாஜிகாந்தி நிறைவுரையாற்றினார். மாநில நிர்வாகக் குழு சி.பாலச்சந்தர், வழக்குரைஞர் மு.சசி, கே.தண்டபாணி, எஸ்.இளங்கோவன், டி.மாரிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT