புதுக்கோட்டை

மகளிர்  கல்லூரியில் திறன் மேம்பாட்டுப்பயிற்சி

DIN

புதுக்கோட்டை அருகேயுள்ள கைக்குறிச்சி ஸ்ரீ பாரதி மகளிர் கல்லூரியில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது .
  கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற பயிற்சிக்கு  நிறுவனங்களின் தலைவர் குரு.தனசேகரன் தலைமை வகித்தார். செயலர் கே.ஆர்.குணசேகரன், அறங்காவலர்  உறுப்பினர்கள் கே.ரெங்கசாமி, அ. கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில், மதுரை பின் சாப்ட் நிறுவனத்தின் பயற்சியாளர்  ஜெகன் பேசியது: 
எல்லாத் திறமைகள் இருந்தும் உரிய வாய்ப்பு கிடைக்காதபோது ஏற்படும் மனத்தடையைப் போக்குவது குறித்து பலரும் எதிர்கொள்வதுண்டு. சாதாரணமாக வரும் பதில், உரிய வாய்ப்பு வரும்வரை காத்திருக்க வேண்டும். ஆனால், சாமர்த்திய சாலிகள் தரும் பதில், உரிய வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பதே. தன்னுடைய இடத்தைப் பிடிப்பதும், தன்னுடைய தடத்தைப் பதிப்பதும் முக்கியம் என்று கருதிய மனிதர்கள் முண்டியடித்து, முயற்சி செய்து, முன்னேறியதன் விளைவுதான், ஏறமுடியாத சிகரங்களில் அவர்களை ஏற்றிவைத்து அழகு பார்த்தது.  தடைகள் தாமாக விலகும் என்று காத்திருப்பதைவிட, தடைகளை நகர்த்தியவர்களே தாண்டிச் செல்லுகிறார்கள். ஒரு கேள்வியோ, சவாலோ எதிரே மலைபோல் நிற்கிறது. அதனை எப்படியெல்லாம் கடந்து வரலாம் என்று பல கோணங்களில் பார்த்து வரும்போது, அந்த சவாலை எல்லாக் கோணங்களிலுமே பார்த்துவிட முடிகிறது. நாம் எதிர்கொள்ள வேண்டிய சவால்களைத் தாண்ட நாம் தொடர்ந்து முயல்வதே பாதி வெற்றி. ஏனென்றால் பெரும்பாலான சிக்கல்களுக்கு தீர்வாக நம்மை வெற்றி கொள்ள முயற்சி செய்து கொண்டிருப்பதில்லை. ஒரு சவாலை அணுகுகிற முறையே தலைகீழ் மாற்றத்தைத் தந்துவிட முடியும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

ஜிம் செல்பவரா நீங்கள்.. மாரடைப்பு குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

இருதரப்பினரிடையே கடும் மோதல்: கடைகளுக்கு தீ வைப்பு - போலீஸார் குவிப்பு!

SCROLL FOR NEXT