புதுக்கோட்டை

விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி

DIN

அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகே மாற்றுத்திறனாளிகளுக்கான விழிப்புணர்வு பிரசாரம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தஞ்சை அன்னை கம்சலை தொண்டு நிறுவனத்தின் கலைக்குழுவினரோடு புதுக்கோட்டை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் இளநிலை மறுவாழ்வு அலுவலர் கோ.வசந்தராஜ்குமார் தலைமையில் முடநீக்கியல் வல்லுநர் ச.ஜெகன்முருகன்  உள்ளிட்டோர் பொதுமக்களுக்கு கிராம கலைநிகழ்ச்சிகள் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து எடுத்துரைத்தனர்.
தேசிய அடையாள அட்டை பெறுவதற்கான தகுதிகள் மற்றும் அதற்கு வழங்க வேண்டிய சான்றுகள், அளிக்கப்படும் உதவிகள், மாநில அரசின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை, மத்திய அரசு மூலம் 9 ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகை, பார்வையற்ற மாணவர்களுக்கு வாசிப்பாளர் உதவித்தொகை வழங்கும் திட்டம்  மற்றும் பல்வேறு வகையான உதவித்தொகை மற்றும் சலுகைகள் குறித்து எளிய முறையில் விளக்கிக் கூறப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலக கராத்தே போட்டி: விழுப்புரத்திலிருந்து மூவா் பங்கேற்பு

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

SCROLL FOR NEXT