அறந்தாங்கி அருகே இன்று மக்கள் தொடர்பு முகாம்
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே மேல்மங்களம் கிராமத்தில் வெள்ளிக்கிழமை மக்கள் தொடர்பு முகாம் நடைபெறுகிறது.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே மேல்மங்களம் கிராமத்தில் வெள்ளிக்கிழமை மக்கள் தொடர்பு முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து அறந்தாங்கி வட்டாட்சியர் சி. ரவிச்சந்திரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
அறந்தாங்கி வட்டம் சார்பில் மேல்மங்களம் கிராமத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அ. ராமசாமி தலைமையில் காலை 11 மணியளவில் நடைபெறும் மக்கள் தொடர்பு முகாமில் இப் பகுதியைச் சேர்ந்தோர் அரசு நலத்திட்ட உதவி, மற்றும் தேவைகளை மனுவாக அளித்து பயன் பெறலாம்.