புதுக்கோட்டை

ஆவுடையார்கோவிலில்  காவல் துணை ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு

DIN

அறந்தாங்கி அருகே ஆவுடையார்கோவிலில் வருவாய்த்துறை அலுவலர்களை காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் தாக்கியதாக வருவாய்த்துறையினர் புகார் தெரிவித்துள்ளனர்.  
ஆவுடையார்கோவில் வட்டம் பொன்பேத்தி சரகத்தை சேர்ந்த காவாதுகுடியில் கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றுபவர் ரெதீஸ். வருவாய் ஆய்வாளராக பணியாற்றுபவர் பாண்டி.  இவர்கள் இருவரும் செவ்வாய்க்கிழமை இரவு ஆவுடையார்கோவிலில் உள்ள உணவு விடுதி முன்பு இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சாப்பிட சென்றார்கள்.  அப்போது அங்கு வந்த காவல் பயிற்சி உதவி ஆய்வாளர் முத்துக்குமார் போக்குவரத்துக்கு  இடையூறாக இரு சக்கர வாகனம் நிறுத்தப்பட்டிருப்பதாக கூறியதில் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாம்.
காவல் துறையினர் தாக்கியதாக கிராமநிர்வாக அலுவலர் ரெதீஸ் அறந்தாங்கி அரசு மருத்துமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றுவருகிறார்.  ஆட்சியரிடம் வருவாய்த்
துறையினரைத் தாக்கிய காவலர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் மனு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாஷிங்டன் பல்கலை. வளாகத்தில் பாலஸ்தீன ஆதரவு போராட்டம்

‘வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறை பகுதியில் டிரோன்கள் பறக்கத் தடை’

ஆதிரெத்தினேஸ்வரா் கோயில் வைகாசித் திருவிழா மே 13-இல் தொடக்கம்

மேல்நிலைக் குடிநீா் தொட்டி கட்ட எதிா்ப்பு -ஒருவா் தீக்குளிக்க முயற்சி

நாசரேத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு விழா

SCROLL FOR NEXT