முகப்பு
புதுக்கோட்டை

பழைய அரசு மருத்துவமனையில் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு

புதுகை நகரிலுள்ள பழைய அரசு தலைமை மருத்துவமனையை திமுக செயல்தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் புதன்கிழமை இரவில் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:01 PM
பகிர்:

புதுகை நகரிலுள்ள பழைய அரசு தலைமை மருத்துவமனையை திமுக செயல்தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் புதன்கிழமை இரவில் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
புதுகையில் இயங்கிவந்த அரசு தலைமை மருத்துவமனை அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டதும் அந்த வளாகத்துக்கு மாற்றப்பட்டது. நகரில் உள்ள பழைய அரசு தலைமை மருத்துவமனையில் தற்போது அவசர கால சிகிச்சை, காய்ச்சலுக்கான அவசர சிகிச்சை மையம் இயங்கிவருகிறது. இதையறிந்த திமுக செயல்தலைவர் ஸ்டாலின்  பசுமலைப்பட்டியில் கூட்டம் முடிந்தபிறகு, பழைய அரசு தலைமை மருத்துமனைக்கு வந்தார். அங்கிருந்த அரசு மருத்துவர்  வெங்கேடஷிடம் தற்போது அளிக்கப்படும் சிகிச்சை விவரங்களை கேட்டறிந்தார். தொடர்ந்து, எம்எல்ஏக்கள் பெரியண்ணன்அரசு , ரகுபதி ஆகியோர் அரசு தலைமை மருத்துவமனை இடமாற்றத்தின் காரணமாக பொதுமக்கள் கடும் அவதிப்படுவதாகவும் தெரிவித்தனர். இதுகுறித்து திமுக பரிசீலிக்கும் எனக்கூறிவிட்டு ஸ்டாலின் புறப்பட்டுச் சென்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →