புதுக்கோட்டை

சைல்டுலைன் சார்பில் குழந்தைகள் தின விழா

DIN

பொன்னமராவதி அருகே உள்ள மறவாமதுரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் புதுகையில் நடைபெறும் புத்தகக் கண்காட்சியில் புத்தகங்கள் வாங்க உண்டியல் மூலம் சேமித்து வருகின்றனர்.
புதுக்கோட்டையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் சார்பில்  வரும் 24-ம் தேதி தொடங்கி டிச.3 வரை நடைபெற உள்ள புத்தக கண்காட்சியில் பள்ளி மாணவர்கள் புத்தகங்கள் வாங்கிப் பயனடையவும், சேமிப்பை ஊக்குவிக்கும் விதமாகவும் பொன்னமராவதி அருகேயுள்ள மறவாமதுரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி இலுப்பூர் தெரசா கல்லூரி மூலம் இப்பள்ளி மாணவ, மாணவியர் 71 பேருக்கும் உண்டியல் வழங்கப்பட்டுள்ளது. இவை மூலம் மாணவர்கள் தினமும் பணத்தைச் சேமித்து வருகின்றனர். வரும் 27-ம் தேதி இந்த மாணவ, மாணவிகள் புதுகை புத்தகக் கண்காட்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டு நூல்கள் வாங்கி மகிழ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கண்காட்சி நிறைவில் உண்டியல் மாணவர்களின் தற்சார்பு சேமிப்பை ஊக்குவிக்கும் வகையில் அவர்களிடமே வழங்கப்பட உள்ளது. ஏற்பாடுகளை பள்ளித் தலைமையாசிரியர் கே. சதாசிவம் ஆசிரியர்கள் வா. பூச்சி, பழ. தேன்மொழி, அ. பழனிச்சாமி, மு. சிவகாமி, சு. ரெங்கராஜ் உள்ளிட்டோர் செய்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT