புதுக்கோட்டை

பொன்னமராவதி பள்ளிகளில் தேசிய அடைவுத்தேர்வு

DIN

பொன்னமராவதி வட்டார வள மையத்துக்குள்பட்ட 14 பள்ளிகளில் 3, 5, 8 வகுப்புகளுக்கு தேசிய அடைவுத்தேர்வு திங்கள்கிழமை நடைபெற்றது.
புதுகை மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் மூலம் பொன்னமராவதி ஒன்றியத்தில் சொக்கநாதபட்டி,, வார்ப்பட்டு, உசிலம்பட்டி, கழனிவாய்ப்பட்டி, ரெகுநாதபட்டி, வெள்ளாளபட்டி, ஆலவயல், வி.நல்லூர், காரையூர் ஆகிய ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள் மற்றும் மைலாப்பூர், கட்டையாண்டிபட்டி, இடையாத்தூர் நடுநிலைப்பள்ளிகள், ஆலவயல், நகரப்பட்டி ஆகிய மேல்நிலைப்பள்ளிகளில் தேசிய அடைவுத் தேர்வு திங்கள்கிழமை நடைபெற்றது. தேர்வை வட்டார வள மைய மேற்பார்வையாளர் செல்வக்குமார், உதவி தொடக்க கல்வி அலுவலர் சே.ராமதிலகம், கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் லதாதேவி, பொன்னமராவதி வட்டார வளர்ச்சி அலுவலர் எஸ்.மதியழகன் ஆகியோர் பார்வையிட்டனர். தேர்வுக்கான ஒருங்கிணைப்புப் பணிகளை ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் முதுநிலை விரிவுரையாளர் மாரியப்பன் செய்திருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

SCROLL FOR NEXT