பொன்னமராவதியில் டெங்கு ஒழிப்பு பணிகள் ஆய்வு
பொன்னமராவதி வட்டாரத்தில் பெரியார்நகர், செவலூர் ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு கொசு ஒழிப்பு
பொன்னமராவதி வட்டாரத்தில் பெரியார்நகர், செவலூர் ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கையை வியாழக்கிழமை இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் ஷேக் முகமது நேரில் பார்வையிட்டார். காரையூரில் மகாலெட்சுமி(35) என்பவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு புதுகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
இந்நிலையில் இவரது வீட்டின் சுற்றுப்புறத்தில் உள்ளவர்களுக்கு காய்ச்சல் பரவாவண்ணம் புகை மருந்து அடிக்கப்பட்டு தூய்மைப்பணி நடைபெற்றது.இப்பணியை ஆர்டிஒ சேக் முகமது நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் வட்டார வளர்ச்சி அலுவலர் எஸ்.மதியழகன், வட்டாட்சியர் எஸ். சங்கர், காரையூர் வருவாய் ஆய்வாளர் சாதிக் பாட்சா, கிராம நிர்வாக அலுவலர்கள் ஆரோக்கியராஜ், பாலாஜி, சுகாதார ஆய்வாளர்கள் உத்தமன், தியாகராஜன், ரவீந்திரன், ராமலிங்கம் ஆகியோர் உடனிருந்தனர்.