புதுக்கோட்டை

விராலிமலை பள்ளிகளில் டெங்கு விழிப்புணர்வு

DIN

விராலிமலை, கொடும்பாளூர் பள்ளிகளில் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கொடும்பாளூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழிப்புணர்வு முகாமுக்கு கொடும்பாளூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் பி. எஸ். தமிழ்மணி தலைமைவகித்து டெங்கு காய்ச்சல், அது பரவும் முறை, ஆரம்ப நிலை, காய்ச்சல் வராமல் தடுக்கும் முறை, மேற்கொள்ள வேண்டிய பரிசோதனை, அளிக்கப்பட வேண்டிய சிகிச்சை பற்றி விளக்கினார்.
விராலிமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாமுக்கு விராலிமலை அரசு மருத்துவ அலுவலர் எம். ஜான்விஸ்வநாதன் தலைமை வகித்து டெங்கு காய்ச்சல் குறித்து ஆசிரியர்கள், மாணவர்களுக்கு விளக்கினார்.
மருத்துவர் சாருபிரபா, சுகாதார ஆய்வாளர் கே. செல்வராஜ், கண்ணன், ஆய்வகத் தொழில்நுட்ப வல்லுநர் ஆர். வனிதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT