முகப்பு
புதுக்கோட்டை

கீரமங்கலத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை மாவட்டம்,  கீரமங்கலத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 5:52 PM
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம்,  கீரமங்கலத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 கீரமங்கலம் பேருந்து நிறுத்தம் அருகே சங்கத்தின் ஒன்றியச் செயலர் செல்வராசு தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்,  நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.
கீரமங்கலத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தை இடமாற்றம் செய்யக்கூடாது.
விவசாயிகளின் பயிர்க் கடன்களை முற்றிலும் தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு தேசிய, கூட்டுறவு வங்கிகளில் புதிதாக விவசாய கடன் வழங்க வேண்டும். பயிர் காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்காற்றுக்குழு அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாவட்டச்செயலர் மு. மாதவன்,  நகரச் செயலர் பவானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →