முதுநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாட்டை நீக்க வலியுறுத்தல்
முதுநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அச்சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
முதுநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அச்சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை ஆசிரியர் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதுக்கோட்டை பிரகதம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளியில் வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் செல்வம் தலைமை வகித்தார். மாநிலதுணைத் தலைவர் கோவிந்தன் முன்னிலை வகித்தார். மாநிலத் தலைவர் மணிவாசகன் பேசினார். கடந்த 2009ஆம் ஆண்டுக்குப் பிறகு பணியில் சேர்ந்த முதுகலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைவது, புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய திட்டத்தை அமல்படுத்துவது, 21 மாத ஊதிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.
கோடை விடுமுறையில் பணிபுரிந்த நாள்களுக்கு ஈட்டிய விடுப்பு வழங்குவது, அரசாணை 51யை உடனடியாக திருத்தம் செய்து உழைப்பூதியத்தை உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.