முகப்பு
புதுக்கோட்டை

அரிமளம் சிவகமலம் மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா

புதுகை மாவட்டம், அரிமளம் ஸ்ரீ சிவகமலம் மெட்ரிக். பள்ளி ஆண்டு விழா சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:10 PM
பகிர்:

புதுகை மாவட்டம், அரிமளம் ஸ்ரீ சிவகமலம் மெட்ரிக். பள்ளி ஆண்டு விழா சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு பள்ளியின் நிறுவனர் தங்கவேல் தலைமை வகித்தார். தாளாளர் சபரி தங்கவேல் முன்னிலை வகித்தார்.
விழாவில், சிறப்பு விருந்தினராக திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன் பங்கேற்றுப் பேசியது: 
நல்ல விஷயங்களை மட்டுமே மாணவ, மாணவிகள் எடுத்துக் கொள்ள வேண்டும். மாணவர்கள் கேள்வி கேட்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்வதுடன், இன்றைய அரசியல் நிலையைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும். 
பெற்றோர்கள் நடந்து கொள்ளும் விதத்தில் தான் குழந்தைகள் வளருகின்றனர். குழந்தைகள் நல்லவர்களாக வளர பெற்றோர், ஆசிரியர்கள் அனைவரும் பொறுப்பாவார்கள் என்றார்.
தொடர்ந்து, எழுத்தாளர் சுமதி ஸ்ரீ  பேசியது: பெற்றோருக்கு பெருமை தரும் வகையில் பிள்ளைகள் நடந்து கொள்ள வேண்டும். வெற்றியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படக் கூடாது. 
மாறாக, தங்கள் குழந்தைகளுக்கு நற்பண்புகளைக் கற்றுத்தர வேண்டும். கடினமாக உழைத்தால் மட்டுமே வெற்றி வசப்படும் என்றார்.
பள்ளியில் பதினொன்றாம் வகுப்புகள் தொடங்க உள்ளதால் வரும் கல்வி ஆண்டுக்கான சேர்க்கை படிவத்தை இயக்குநர் கரு.பழனியப்பன் வெளியிட்டார். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள், பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு மாநில, மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 
விழாவில் மணி அய்யர், சோமு. தமிழரசன், வெங்கடேஷ் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டு வாழத்துரை வழங்கினார்கள். பள்ளி முதல்வர் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →