முகப்பு
புதுக்கோட்டை

ரயில் மோதி இளைஞர் சாவு

புதுக்கோட்டை திருவப்பூர் ரயில்வே கேட் அருகே ரயில் மோதி உயிரிழந்த இளைஞரின் சடலத்தை மீட்டு போலீஸார் விசாரணை  மேற்கொண்டுள்ளனர்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:10 PM
பகிர்:

புதுக்கோட்டை திருவப்பூர் ரயில்வே கேட் அருகே ரயில் மோதி உயிரிழந்த இளைஞரின் சடலத்தை மீட்டு போலீஸார் விசாரணை  மேற்கொண்டுள்ளனர். புதுக்கோட்டை திருவப்பூர் ரயில்வே கேட் அருகே ஞாயிற்றுக்கிழமை காலை ரயில் மோதி இளைஞர் ஒருவர் இறந்து கிடந்தார். தகவலறிந்து சென்ற திருக்கோகர்ணம் போலீஸார் இதுகுறித்து ரயில்வே போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த திருச்சி ரயில்வே போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், உயிரிழந்தவர் புதுக்கோட்டை காமராஜபுரத்தைச் சேர்ந்த முத்து (34) கூலித்தொழிலாளி என்பது தெரியவந்தது. சடலத்தை மீட்டு புதுகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முத்து தற்கொலை செய்து
கொண்டாரா என்ற கோணத்திலும் ரயில்வே போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.