புதுக்கோட்டை

பொன்னமராவதி அருகே மஞ்சுவிரட்டு

DIN

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகிலுள்ள வார்ப்பட்டு கிராமத்தில் புதன்கிழமை மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் சீறிபாய்ந்த காளைகளை காளையர்கள் அடக்கினர்.
வார்ப்பட்டு அருள்மிகு சூலப்பிடாரி அம்மன் கோயிலில் மகா சிவராத்திரியையொட்டி பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடனைச் செலுத்தி வழிபாடு செய்தனர்.  இதைத் தொடர்ந்து மஞ்சுவிரட்டு நடைபெற்றது. புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட சுற்றுப்புற மாவட்டங்களிலிருந்து  வந்திருந்த காளைகள் வரிசைப்படியாக மஞ்சுவிரட்டில் அவிழ்த்துவிடப்பட்டன.
இந்த மஞ்சுவிரட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்ற நிலையில், பல காளைகளை  வீரர்கள் வீறுகொண்டு அடக்கினர். ஆனால் சில காளைகள் வீரர்களுக்கு பிடிகொடுக்காமல் சென்றன.
கால்நடை மருத்துவக் குழுவினரும், பொது மருத்துவ குழுவினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. பாதுகாப்பு ஏற்பாடுகளை பொன்னமராவதி போலீஸார் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமருகலில் மே 5-இல் கடையடைப்பு

ராமநாதபுரம் அருகே வட மாநில கா்ப்பிணிப் பெண் கொலை

‘பொது வெளியில் கழிவு நீரை திறந்து விட்டால் கடும் நடவடிக்கை’

பரமக்குடி- மதுரை இடையே இடைநில்லா குளிா்சாதன பேருந்து இயக்கக் கோரிக்கை

ஓட்டப்பிடாரம் அருகே மாட்டுவண்டி போட்டி

SCROLL FOR NEXT